சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் வேலை.. ஒருநாள் சம்பளம் ரூ.50

--

பெங்களூர்:

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.  இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா இறந்துவிட்டதால்  மீதமுள்ள மூன்று குற்றவாளிகளுக்கும் தலா  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து இன்று மாலை 5.15 மணிக்கு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இளவரசியுடன் சரண் அடைந்தார்,

சிறையில் மெழுகுவர்த்தி செய்யும் பணி சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 சம்பளம் அளிக்கப்படும்.