சசிகலா பேட்டி: அம்பலமாகும் நாடகம்?: பார்ட் டூ

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அளித்த பேட்டி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து நெட்டிசன் பகுதியில், கோவிந்தராஜன் சீனிவாசன் எழுதியிருந்த பதிவை வெளியிட்டிருந்தோம்.

அதில், “அந்த பேட்டியில் சசிகலாவின் ஒரு பக்கம் மட்டுமே நேயர்கள் பார்க்கும்படி இருந்தது.  அவரது மறு காதில், இயர் போன் வைக்கப்படிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்கு வெளியில் இருந்து “யாரோ” ஒருவர் பதில் சொல்ல.. அதை தனது காதில் வாங்கி சசிகலா  பேசியிருக்க வேண்டும். அதனால்தான் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு பேசினார் சசிகலா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது இன்னொருவிதமாக சமூகவலைதளங்களில்  தகவல் பரவி வருகிறது.

அதாவது, “அவரிடம் ஏற்கெனவே கேள்விகள் கொடுக்கப்பட்டுவிட்டன. அந்த கேள்விகளுக்கு “யாரோ” பதில் சொல்லி, அதை ஒலிப்பதிவு செய்து வைத்துவிட்டார்கள்.  அந்த பேட்டி காட்சியில் சசிகலாவின் நாற்காலிக்கு கீழே ஒலிப்பதிவு கருவி இருப்பதை பார்க்கலாம்” என்று அந்த வாட்ஸ்அப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.