அம்மா அணி திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை

சென்னை:

டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சசிகலா சகோதரர் திவாகரன் அம்மா அணி என்று தனியாக செயல்பட தொடங்கினார். முதல்வர் பழனிச்சாமி,- துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால் தினகரன் & திவாகரன் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சசிகலா போட்டோ, பெயரை பயன்படுத்த கூடாது. மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். உடன் பிறந்த சகோதரி சசிகலா என ஊடகங்களில் கூறுவதை நிறுத்த வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.