விழுப்புரம்:

ர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சர்க்கரையை அதிகரிக்கும் வகையில், அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் உள்பட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கியது. இந்த ஆணையம், ஏறக்குறையை தனது விசாரணையை முடித்து, துணைமுதல்வர் ஓபிஎஸ்-சிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டி காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகமும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சட்டஅமைச்சர் சிவி.சண்முகம்,  அம்மாவுக்கு அல்வா கொடுத்து சசிகலா கொன்றுவிட்டார் என்று பகிர் தகவலை கூறி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக் கான ஆலோசனை கூ அதிட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட  அமைச்சர் சி.வி.சண்முகம் , ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உடல்நலமின்றி  அனுமதிக்கப்பட்டபோது நாங்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்க முயன்றோம். ஆனால் அமைச்சர்களாகிய எங்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. 71 நாட்கள் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

ஜெயலலிதா சாதாரணமாக இறக்கவில்லை. கிராமத்தில் படிக்காதவனை கேட்டால்கூட இதை சொல்வான். ஒருவரை சாகடிக்க வி‌ஷம் கொடுக்க வேண்டியது இல்லை. வெல்லம் கொடுத்தே சாகடிக்கலாம். இது கிராமத்துக்குகாரனுக்கும் தெரியும். அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரைநோய் இருப்பது தெரிந்தும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு அல்வா கொடுத்துள்ளனர். நோய் முற்றி அவரை இயற்கையாக இறக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருந்துள்ளது. இப்படி சதித் திட்டம் போட்டு ஜெயலலிதாவை நம்மிடம் இருந்து பிரித்து விட்டார்கள். ஜெயலலிதா சாவுக்கு காரணமானவர்கள் விரைவில் சிறை செல்வார்கள். ஜெயலலிதா ஆன்மா அவர்களை சும்மா விடாது.

தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து தகுதி இல்லாதவர்களையும் எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருக்கு துரோகம் நினைக்கிறார்கள். எந்த சின்னத்தில் வெற்றி பெற்றார்களே அந்த இரட்டைஇலையை அழிப்பேன் என்று சொல்கிறார்கள். இரட்டைஇலை சின்னத்தை அழிப்பேன் என்று கூறியவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் சண்முகத்தின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.