வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு

சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.  அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா மீதான வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ள வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.   இந்த வழக்கில் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையொட்டி சசிகலா தரப்பில் அளித்த மனுவில் பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பதில் மனு அளிக்க அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed