சென்னை,

மிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் முதல்வராக பதவி ஏற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி தன்து ராஜினாமா கடிதத்தை பெற்றதாக ஓபிஎஸ் கூறினார்.

இதைத்தொடர்ந்து அதிமுக கட்சியில் பிரளயம் வெடித்துள்ளது. இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் அனை வரும் சசிகலா தரப்பால் கண்காணிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வராக பதவி ஏற்க அழைக்கக்கோரி ஆளுநரை சந்திக்க சசிகலா முயன்று வருகிறார்.

ஆனால் கடந்த சில நாட்களாக ஆளுநர் சென்னை வருவதை தவிர்த்து மும்பையிலேயே இருந்தார். இதன் காரணமாக சர்ச்சைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று பிற்பகல் சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திக்க, அதிமுக சசிகலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை  தெரிவித்து உள்ளது.