நடராஜனை சந்தித்தார் சசிகலா

சென்னை,

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை  பார்க்க பரோலில் வந்த சசிகலா சுமார் 2 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார்.

கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் நடராஜன் மிக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு  வெண்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது

அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்துக்குப்பின் நடராஜன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், சிறுநீரகம், கல்லீரல் சீராக இயங்குகிறது என்றும் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நடராஜனின் மனைவியும் அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா, கணவரை சந்திக்க மருத்துவமனை வந்தார்.

காலை 11 மணிக்கு மேல் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். சசிகலாவை வாழ்த்தி முழக்கமிட்டனர். அவர்களது வாழ்த்தினை புன்னகையுடன் சசிகலா ஏற்றுக்கொண்டார்.

பிறகு கணவர் நடராஜனை சந்தித்த அவர், அங்கு இரண்டு மணி நேரம் இருந்தார். பிறகு புறப்பட்டு தான் தங்கியிருக்கும் திநகர் இல்லத்துக்குச் சென்றார்.

கார்ட்டூன் கேலரி