கொழும்பு:
சிறையில் தனக்கு சசிகலா தலையணை கேட்டதாகவு் அது மறுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசியல்வாதி ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, அண்டை நாடான இலங்கையிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மக்கள் மட்டுமின்றி, அரசில் தலைவர்களும் இது குறித்து குறிப்பிடுகிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியினர் நேற்று கேகாலை நகரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்டு பேசிய அரசியல் பிரமுகர் ரஞ்சன் ராமநாயக்க, சசிகலா கைது குறித்து குறிப்பிட்டார்.

அவர், “சசிகலா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் தனக்குகூடுதலான தலையணை, போர்வை, ஏ.சி. போன்ற சொகுசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்கப்பட வில்லை.

ஆனால் இலங்கையில் நிலைமை வேறாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில சிறையில் அடைக்கப்பட்ட போது தனக்கு கூடுதல் தலையணை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதுவும் தலைக்கு வைப்பதற்கு அல்ல. தவிர மேலும் பல சொகுசு வசதிகளையும் கேட்டுள்ளார். அதுவும் தரப்படுகிறது.

ஆம்… இலங்கையில் கைது செய்யப்படும் அரசியல் வாதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றது சசிகலாவைப் போன்று நடத்தவில்லை. இதுதான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள வித்தியாசம். இந்த நிலை மாற வேண்டும்” என்று அவர் பேசினார்.