அதிர்ச்சி:  சசிகலாவுக்கே இந்த நிலையா?

 

நியூஸ்பாண்ட்:

ம்ப முடியவில்லை. ஆனாலும் உண்மைதான்.

தவிர்க்கவே முடியாமல் சிறையில் இருந்தாலும், சகல வல்லமை பொருந்தியவர் அ.தி.மு.க. பொதுச்செயலாலற் வி.கே. சசிகலா. அவரது செக் திரும்பி வந்துவிட்டது என்பதை நம்ப முடிகிறதா?

ஆம்… அதுதான் நடந்திருக்கிறது!

கடந்த ஜனவரி 17ம் தேதி,  சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்துக்குச் சென்றார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா. அங்கு புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலையை திறந்துவைத்தவர், அங்குள்ள “எம்.ஜி.ஆர். காது கேளாதோர்-வாய்பேச முடியாதோர் பள்ளி”க்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்ததோடு,  மாணவ-மாணவிகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவிகளை வழங்கினார்.

சசிகலா…

இந்த நிகழ்ச்சிகளில் அப்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இப்போது விவகாரம் என்னவென்றால், சசிகலா அளித்த 10 லட்ச ரூபாய் நன்கொடை காசோலையை வங்கி ஏற்க மறுத்துவிட்டது. காசோலையில் உள்ளது சசிகலாவின் கைகெயழுத்து போல் இல்லை என்கிறது வங்கி நிர்வாகம்.

அது மட்டுமல்ல… காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் காது கேட்கும் மெஷின்களை நன்கொடையாக அளித்திருந்தார் அல்லவா?

அதற்கான பணத்தைத் தராததால் அதனை விற்பனை செய்த நிறுவனம் அந்த மெஷின்களைத் திரும்ப எடுத்துச் சென்று விட்டது.  இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில்..

“சசிகலாவின் கையெழுத்தே சிக்கலாகி இருக்கிறதா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர 15 லட்ச ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிளுக்கு பணம் கட்டாததால் அதை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டார்கள். மொத்தம் 25 லட்ச ரூபாய் என்பது சசிகலாவுக்கோ அவரது அணியிலுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கோ பெரிய விசயம் இல்லையே. இந்தத் தொகையை மீண்டும் அவர்கள் அளிக்கலாமே” என்று ஒரு கருத்து உலவுகிறது.

English Summary
sasikala' position was shocking: sasikala's cheque was returned