பெங்களூரு:

சிகலாவுக்கு சிறப்பு வசதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கர்நாடக சிறைத்துறை ரூபாவை மீண்டும் அதே பணி புரிய உத்தரவிட வேண்டும் என்று கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைவாசிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரின் தோழியும் அதிமுக பொதுச்செயலாள ருமான வி.கே.சசிகலாவும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கடையே சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக உயரதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுவதாகவும் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா அறிக்கை அனுப்பினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அடுத்து ரூபா உட்பட பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைவாசிகள் 200க்கும் மேற்பட்டவர்கள், ரூபாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சசிகலாவுக்கு உதவிய சிறை கண்காணிப்பாளர் அனிதாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று. அவர்கள் தங்களது காலை உணவை புறக்கணித்து விட்டனர்.

கைதிகளின் போராட்டத்தால் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.