“சசிகலா புஷ்பாவின் தீடீர் அதிமுக பாசம்”

சென்னை,

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.யான சசிகலா புஷ்பா திடீரென அதிமுக மீது பாசம் காட்ட முன்வந்துள்ளார்…  இந்த திடீர் பாசத்தால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் பரபரப்பு பிரமுகர்களில் ஒருவர் சசிகலா புஷபா. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த  இவர்,  திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை டில்லி விமான நிலையத்தில் வைத்து தாக்கினார். இதனால் எழுந்த பிரச்சினையில், அவரை எம்.பி. பதவியை விட்டு விலகச் சொல்லி கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதை மறுத்த சசிகலா புஷபா, ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும் மிரட்டியதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

sasikala

இதன் பிறகு சசிகலா புஷ்பா, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

தொடர்ந்து அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அதில் மோடியை மதிப்பிற்குரிய பாரத பிரதமர் என புகழ்கிறார். ஆகவே  பாஜக பக்கம் தாவப்போகிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக தலைமையை விமர்சிக்காமல் அதிமுக தொண்டர்களை கடுமையான உழைப்பாளிகள் என்று புகழ்கிறார்.

அதோடு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடவும், அவ்வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.

இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: "சசிகலா புஷபா, affection, aiadmk, Sasikala pusapa, Sudden, tamilnadu, அதிமுக பாசம்", தமிழ்நாடு, தீடீர்
-=-