சென்னை :
எம்.பி. சசிகலா புஷ்பா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார்.
திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் அறைந்தது தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில், சசிகலாவை விசாரித்த ஜெ., எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக தெரிகிறது.

காங்., எம்எல்ஏ விஜயதரணி
காங்., எம்எல்ஏ விஜயதரணி

இதையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கதறி அழுதார் சசிகலா எம்.பி. தன்னை கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார் என்று புகார் கூறினார்.   பேசிக்கொண்டு இருக்கும்போதே  சசிகலா எம்.பி. அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டசபை வளாகத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி: அதிமுக கட்சியிலிருந்து  சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் ? என்ன நடந்தது? என்பது குறித்த காரணத்தை வெளியிட வேண்டும்.  அவ்வாறு  அவர்  நடந்து கொண்டதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரை கட்சியிலிருந்து நீக்கியது வரவேற்கதக்கது என்றார்.
அப்போது, தன்னை மிரட்டியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசியது பற்றி விஜயதரணியிடம்  கேட்டதற்கு,
சசிகலா புஷ்பா மிரட்டப்பட்டதாக அவர் கூறியது. நீங்கள் சொல்லி தான் தெரிகிறது. அப்படி அவர் மிரட்டப்பட்டிருந்தால் அதற்கு என்ன காரணம், எந்த குற்றத்திற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்  என ஜெயலலிதா விளக்க வேண்டும்.
நடப்பது அனைத்தும் சினிமா கதை போல் உள்ளது. அதே போன்று விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பது பற்றி திருச்சி சிவாவும் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.