Random image

சசிகலா புஷ்பா… யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன?

b

சசிகலா புஷ்பா யார்?

நடு நெற்றியில் குங்குகமம், அதற்கு மேலே தீட்டிவிடப்பட்ட திருநீறு, சாந்தமான பார்வை, அப்பாவி முகம். இத்துனா சசிகலாவின் எளிய தோற்றம். ஆனால் அந்நியன் விக்ரம் மாதிரி, உள்ளுக்குள்ளே இன்னொரு சசிகலா உண்டு. அது , அதிர்ச்சி முகம்.

இந்த டபுள் ஆக்ட் சசிகலா புஷ்பாவின் சொந்த ஊர், சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அருகேயுள்ள அடையல் என்ற கிராமம்.  இவரது கணவர் டி. லிங்கேஸ்வர திலகன்.  ஒரே மகன் பிரதீப் ராஜா (17).

மூன்று  முறை ஐ.ஏ.எஸ்ஸின் முதல்நிலைத் தேர்வு எழுதியுள்ளார் சசிகலா புஷ்பா . அதுபோல, குரூப்- 1 தேர்வெழுதி நேர்முகத் தேர்வு வரை சென்றுள்ளார். அதன்பின், வயது வரம்பு கடந்துவிட்டதால் தேர்வெழுத முடியவில்லை.

இவரது குடும்பத்திலும், இவரது கணவர் குடும்பத்திலும் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்தான்.இந்தக் குடும்பத்திலிருந்து உருவான முதல் அரசியல்வாதி சசிகலா புஷ்பாதான்.

எம்.ஏ., டி.பி.ஏ. படித்துள்ள சசிகலா புஷ்பா, சென்னையில்  டீம் ஐ.ஏ.எஸ். அகாதெமியையும், திருநெல்வேலியில் ஜே.ஜே. இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தையும் சசிகலா நடத்தி வருகிறார்.

a

அரசியலில் முக்கிய இடம் பிடித்தது எப்படி?

கடந்த 2010ம் ஆண்டு வாக்கில்தான் அரசியலின் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தார்.  சைதை துரைசாமிக்கு நெருக்கமான சசிகலா புஷ்பா, அவர்மூலம்தான் ஐ.ஏ.எஸ். அகதெமி துவங்கினார். சைதையாரின் தொடர்பை பயன்படுத்தியே  அ.தி.மு.க. தலைமையை நெருங்கினார்.

சைதை துரைசாமி
சைதை துரைசாமி

2011ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்  இவரை   ராதாபுரம் தொகுதி வேட்பாளராக அறிவித்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

ஆனால் பிறகு அந்த தொகுதியை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் வாய்ப்பை இழந்தார்.

இதை ஈடுசெய்யும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மேயராக பதவி வகித்த போதே மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனால்  மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி ஆனார்.  மேலும் அதிமுகவின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்
சசிகலா புஷ்பா. கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பும் இவருக்கு அளிக்கப்பட்டது.

இவரது வளர்ச்சி மிக விரைவாக உச்சத்தைத் தொட்டது. அதே நேரம் அடுத்தடுத்த அதிர்ச்சி சர்ச்சைகளில் சிக்கினார்.

1. கல்வி அதிர்ச்சி:

சசிகலா புஷ்பா, எம்.ஏ., டி.பி.ஏ. படித்ததாக வேட்புமனுதாக்கலின் போது குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் போலியாக சான்றிதழ் வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

2
2. போட்டோ அதிர்ச்சி:

சில மாதங்களுக்கு முன்பு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனாலும் சசிகலா புஷ்பாவின் கணவர் அது  கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்டவை என விளக்கம் அளித்தார். .

3. ஆடியோ அதிர்ச்சி:

தனது ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா பேசும் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த பேச்சில் தூத்துக்குடியில் அதிமுக தோற்கும் என்றும் தான், போதையில் இருப்பதாகவும் கூறுகிறார். அந்த ஆடியோ மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

4. ஏர்போர்ட் அதிர்ச்சி:

ஏற்கெனவே, திருச்சி சிவாவுடன் புகைப்பட சர்ச்சை கிளம்பிய சூழலில், மீண்டும்  அவருடனே ஒரு சர்ச்சை ஏற்பட்டது.  கடந்த சனிக்கிழமை (30.07.2016) அன்று மதியம் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததாக புதிய சர்ச்சை வெடித்தது.

ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ததன் காரணமாக திருச்சி சிவாவை தாக்கியதாக சசிகலா புஷ்பா விளக்கம் கூறினார்.

சசிகலா புஷ்பா - ஜெயலலிதா
சசிகலா புஷ்பா – ஜெயலலிதா

5. பாராளுமன்ற அதிர்ச்சி:

இந்நிலையில் கட்சியில் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

ஆனால் இன்று பாராளுமன்ற மேலவையில் பேசிய சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை  கூறினார்.

கட்சி தலைவர் ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறினார்.

மேலும்,  2020ஆம் ஆண்டு வரை தனக்கு பதவிக்காலம் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்ற அ.தி.மு.கவில்.. அதுவும் அக் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில்..  அக் கட்சி தலைவர் ஜெயலலிதாவை..  எதிர்த்து பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார் சசிகலா புஷ்பா.

உண்மையிலேயே சசிகலா புஷ்பாவின் அதிர்ச்சிகர நடவடிக்கைகளில் இதுவே உச்சம்.