‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான காட்சி: அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு

--

சென்னை:

ஜினி நடித்துள்ள தர்பார் படத்தில், சசிகலா தொடர்பான காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,  சசிகலாவை நடத்தையை  விமர்சித்து எடுக்கப்பட்டது சரிதான் என்று கூறி உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியான படம் தர்பார். தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தின்  காட்சியில் காசு இருந்தா ஜெயில்லகூட ஷாப்பிங் போகலாம் என விமர்சிக்கும் காட்சி இடம்  பெற்றுள்ளது. இந்த காட்சி சசிகலா, பெங்களூர் சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றதை எதிரொலிக்கும் விதமாக அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்சி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் தெரிவித்தவர்,  படத்தில் சசிகலாவை விமர்சித்தது சரியானதுதான் என்றும், பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற  கருத்தை வரவேற்பதாக தெரிவித்தவர்,  சிறப்புக்காட்சி விவகாரத்தில் விஜய்யின் பிகில் படத்துக்கும், ரஜினியின் தர்பார் படத்துக்கும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. “சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்றார்.