சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் உள்ள இளவரசி பரோல் கேட்டு மனு

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினரான இளவரசி, பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரியிடம் மனு தாக்கல் செய்து உள்ளார்.

சசிகலாவுடன் இளவரசி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் மறைந்த பிறகு, கடந்த 2017ம் ஆண்டு  பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், மறைந்த ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டி ருந்த  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளி என்றும்,  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஏற்கனவே அவரது கணவர் நடராஜன்  உடல் நலமில்லா மல் சிகிச்சை பெற்ற நேரம் மற்றும் அவரது  மறைவு சமயங்களிலும் சிறையில் இருந்து  பரோலில் வந்து திரும்பி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவரது உறவினரான  இளவரசி பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில்,  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரரை பார்க்க வேண் டும் என்று கூறி உள்ளார். அவர்மனு மீது ஆய்வு நடைபெற்று வருவதாக பெங்களூரு சிறை அதிகாரி  கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..