தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பிய சசிகலா?

பெங்களூரு:

திமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்த நோட்டீஸுக்கு இன்று சசிகலா சார்பில் பதில்  அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவில் உறுப்பினராக உள்ள அனைவரும் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தற்காலிக பொதுச்செயலாளராக யாரையும் நியமிக்க முடியாது என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாருக்கு வி.கே.சசிகலா பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் (நாளை) பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 17ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

நாளையுடன் தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு அளித்த கெடு முடிவடையும் நிலையில், சசிகலா சார்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி