சசிகலா தேர்வு: ஓபிஎஸ் தலைமையில் மூத்த நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று வாழ்த்து!

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை போயஸ் கார்டன் எடுத்து சென்று வாழ்த்து தெரிவித்தனர் ஓபிஎஸ், தம்பித்துரை மற்றும் மூத்த நிர்வாகிகள்.

ன்று நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலா ளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சசிகலா தேர்வு செய்யபட்டதற்கான தீர்மான நகலை எடுத்துக்கொண்டு, முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகளான தம்பித்துரை மற்றும் முன்னணியினர் போயஸ்கார்டன் சென்றுள்ளனர்.

அங்கு சசிகலாவை சந்தித்து, அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு  செய்யப்பட்டு உள்ளதற்கான நகலை கொடுத்து, அவருக்கு வாழ்த்து தெரித்தார்கள்.

முன்னதாக, தம்பிதுரையுடன் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., கட்சியின் பொதுச் செயலாளராக சின்னம்மாவை பொதுக்குழு நியமித்துள்ளது என்று கூறினார்.

Also read