சென்னை,
திமுக கட்சியின் 4- பொதுச்செயலராளராக இன்று பதவி ஏற்கிறார் வி.கே.சசிகலா.
இதற்கான ஏற்பாடுகள் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை மறைந்ததை தொடர்ந்து, காலியாக இருந்த அந்த பதவிக்கு புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்காக  நேற்று முன்தினம் சென்னையில் அதிமுக  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று ஜெயலிதா சமாதிக்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இன்று அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஏற்கும் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் சசிகலா கலந்துகொண்டு பொதுச்செயலாளர் பதவியை ஏற்று, சிறப்புரை ஆற்றுவார் என தெரிகிறது.
1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர் தோற்றுவித்ததை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாள ராக எம்.ஜி.ஆர் இருந்தார். அவர் மறைந்தபொழுது சிறிது காலம் நாவலர் நெடுஞ்செழியனும், அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும், தற்போது 4வது பொதுச்செயலாளராக சசிகலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
பொதுச்செயலாளராகும்  சசிகலா பேசப்போகும் முதல் உரையை கேட்க அதிமுகவினர் ஆவலாக இருக்கிறார்கள்.
இன்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைத்து  அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.