சசிகலாவுக்கு முதல்வருக்கான திறமை இருக்கிறது!:  சு.சாமி திடீர் சர்டிபிகேட்

“சசிகலா, முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை என்று சொல்ல முடியாது” என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற சுப்பிரமணியன் சுவாமி, டில்லிக்கு திரும்பும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“மாடுகள் சாகவில்லை. இது பாரம்பரிய விளையாட்டு என்ற விவரத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு  நடத்த விரைவில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கிடைக்கும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது அந்த கட்சியின் உட்கட்சி விவகாரம்.  சசிகலா, முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு திறமை இல்லை என காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். சோனியா எப்படி அரசியலுக்கு வந்தார் . அவருக்கு ஏதேனும் அனுபவம் இருந்ததா ? ராகுலுக்கு என்ன கல்வி அறிவுஇருக்கிறது? ஆகவே சசிகலாவுக்கு, முதல்வர் பதவி வகிக்க தகுதி இல்லை என்று சொல்லக்கூடாது.

இத்தனை நாள் தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் வரளரவில்லை.  ஆகவே, வரவிருக்கும் செயற்குழுவில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தி கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தமிழக பா.ஜ.கவில். புதிய தலைமை அவசியம்” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி