தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, இன்று அதிகாலை விமானம் மூலம் மதுரை வந்தார். நேரடியாக மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வரும் தகவல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. கோவில் தக்கார்  கருமுத்து.கண்ணன்,   அர்ச்சனைக்கான  சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
1
சசிகலாவின் சிறப்பு வழிபாடு குறித்து நம்மிடம் பேசிய ஆலய நிர்வாகி ஒருவர், ” ஆடி மாதத்துக்கு,  பருவநிலை மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மாதம் என்கிற சிறப்பு உண்டு.  இந்த மாதத்தில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. அதிலும், ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு அர்ச்சனை  செய்யும்போது, நிறைய  நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மனுக்குப் பெயரே ராஜமாதங்கி.  அதிகார பொறுப்பில்  இருப்பவர்கள் இந்த அம்மனை வணங்கும்போது,  அரசு நிர்வாகத்தில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது” என்றார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை மீனாட்சி அம்மன் சந்நிதியில் வைத்து வழிபட்டார் சசிகலா.  ஆகவே இப்போது, உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியலோடு வந்திருக்கிறாரோ என்று சிலர் புகையை கிளப்பினர்.
2
ஆனால் அப்படி எந்த பட்டியலோடும் சசிகலா வரவில்லை. “கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவைத்ததற்கு அம்மனுக்கு தேங்ஸ் சொல்ல வந்திருப்பார்” என்றார்கள்.
சசிகலா வந்து மீனாட்சி அம்மனை வழிபட்டதை விட இன்னொரு கோயிலுக்குச் சென்றதுதான் இப்போது பேசப்படுகிறது.
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்துக்கு எதிரே இருக்கிறது மதுரைவீரன்சாமி கோயில். எப்போது மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தாலும், இந்த கோயிலுக்கும் வந்து வணங்கிவிட்டுத்தான் செல்வார்.
4
ஆனால் அம்மன் கோயிலில் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் சசிகலா, மதுரைவீரன்சாமி கோயிலில் சில நிமிடங்களே செலவிடுவார்.
ஆனால் இந்தமுறை, இங்கு நீண்டநேரம் கண்களை மனமுருகி நின்றார்.
“மனதில் ஏதோ கோரிக்கை வைத்து வேண்டியிருப்பார்” என்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.
அதோடு, “இந்த மதுரைவீரன், எதிரிகளை அழிப்பதில் வல்லவர். இங்கு வந்து மனமுருகி வேண்டிச் சென்றால், நமது எதிரிகள் பஸ்பமாகிவிடுவார்கள்” என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.

  • ச.ஜெயந்த்