பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிறை தண்டனை முடியும் தருவாயில் உள்ள சசிகலா, இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், தான் செலுத்த வேண்டிய அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை   டிடிக்களாக டெபாசிட் செய்கிறார்.

ஜெ.முதல்வராக இருந்தபோது, அவரது பெயரை உபயோகப்படுத்தி தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக்குவித்த, சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டதுரு. இந்த  சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சசிகலாவுக்க  விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையைசசிகலா வழக்கறிஞர் முத்துகுமார் இன்று நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்க இருக்கிறார். இன்று மதியவேளையில், சசிகலா வழக்கறிஞர்கள்,  சசிகலாவின்  அபராதம் ரூ .10.10  கோடியை இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்கின்றனர்.

சிறையில் உள்ள சசிகலாவின் அபராதத் தொகைக்கான வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம்:

 பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடிக்கு டிடி

வசந்தா தேவி என்பவர் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது

ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்து வழங்கியுள்ளார்

விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது