சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். இது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளியான சசிகலா, தனது எஜமானியான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்று வந்ததால்,  தன்னையும்  ஜெயலலிதாபோல பாவித்து, கறுப்புபூனை படை பாதுகாப்பை விரும்புகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. சசிகலாவின் ஆதரவாளர்களின் இந்த செயல் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரை முன்னிட்டு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் சொத்துக்களை அடாவடியாக வாங்கி சேர்த்து வந்தனர். இதுதொடர்பான வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் ரூ  10 கோடி அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைய மற்ற 3 பேர் மீதான தண்டனை உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, பெங்களூர் (Bengaluru) பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா  அடைக்கப்பட்டார். அவர் பரோலில் சென்ற காலம் மற்றும் வேறு சில விதிமுறைகளின் அடிப்படையில் 4 ஆண்டுகால சிறை தண்டனை கணக்கில் கொண்டு, சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி (நாளை) விடுதலையாவார் என சிறைத் துறை நிர்வாகம் முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற இருப்பதால், சசிகலாவின் வருகை தமிழக அரசியலிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.  அவரது வருகையால் தமிழக அரசியலில் ஏற்படும் ஏற்படும், அதிமுகவின் தற்போதைய தலைமை,  தலைகீழாக மாறும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிசகலா தற்போது, பெங்களூரு, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சசிகலாவுக்கு கொரோனா (Corona) தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனாவின் தாக்கமும் மூச்சுத் திணறலும் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, அவரது விடுதலை தாமதமாகலாம் என கருதப்பட்டது. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவர் என பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்தது.

இநத் நிலையில்,  சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை செயலாளருக்கு வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிக்கூண்டில் 4 ஆண்டுகள் இருந்துவிட்டு விடுதலையாக உள்ள சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பா என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சசிகலா, தன்னை ஜெயலலிதா போல பாவித்து, இசட் பிளஸ் பாதுகாப்பை எதிர்பார்க்கிறாரோ என்று சிலரும்,

ஜெயலலிதாவின் ஏவலாளியாகவும், வேலைக்காரியாகவும்   இருந்த சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்பது நாட்டின் பாதுகாப்பையே அவமானப்படுத்தும் செயல் என்றும்,

யாருக்குத்தான் இசட், இசட்பிளஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்பதற்கு தாராரமே இல்லையா?

ஊரார் சொத்தை கொள்ளையடித்து, சிறையில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பா? என சகட்டுமேனிக்கு விமர்சனமும் எழுந்துள்ளது.

இசட், இசட் பிளஸ் பாதுகாப்பு யார் யாருக்கு வழங்கப்படுகிறது?

இசட், இசட் ப்ளஸ், எக்ஸ், ஒய், ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்து வருகிறது.

இசட்பிளஸ் என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவாகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

தமிழகத்தில்,  ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் இசட் பிளஸ்(கருப்பு பூனைப்படை) பாதுகாப்பு இதுவரை எந்த தலைவருக்கும் தமிழகத்தில் வழங்கப்படவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும் தரப்பட்டு வந்தது.

பாதுகாப்பை பொறுத்தவரை இசட் பிரிவுக்கும், இசட் பிளசுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படைகள் சகிதம் ஒரு தலைவர் வலம் வந்தால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் என தெரிந்துகொள்ளலாம்.

இசட் பிளஸ் பாதுகாப்பில் நாள் ஒன்றுக்கு 36 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இதே போல் இசட் பிரிவில் 22 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு அதி நவீன துப்பாக்கி மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும்.

இவ்வளவு முக்கியத்துவம் பற்ற இசட் பிளஸ் பாதுகாப்பு சசிகலாவுக்கு வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மனு கொடுத்துள்ளது வேதனையான விஷயம்.

ஜெயலலிதா மறைந்ததும், அதிமுகவை கைப்பற்றி, ஓபிஎஸ்-சிடம் முதல்வர் பதவியை வலுக்கட்டாயமாக பிடுங்கி, முதல்வர் நாற்காலியில் அமர விரும்பியவர்தானே இந்த சசிகலா…   இதன் காரணமாக, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய கூவத்தூர் சம்பவங்களும் அரங்கேறின.

சசிகலாவின்  முதல்வர் கனவை உச்சநீதிமன்றம் தகர்த்த நிலையில், ஜெ.போல, மீண்டும் கறுப்புபூனை பாதுகாப்பு என்ற கெத்தோடு வலம் வரை நினைக்கிறார்போலும்…

காலத்தின் கோலம்…