தனது அண்ணன் மகன் மகாதேவன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சசிகலா வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது அண்ணன் மகன் மகாதேவன், மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் தற்போது தஞ்சைக்கு கொண்டுவரப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்கு தஞ்சையில் நடக்க இருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாதேவன் மரணமடைந்த தகவல் உடனடியாக, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “அவர், சிறை கண்காணிப்பாளரிடம் பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார். மகாதேவன் இறுதி ச்சடங்கில் கலந்துகொள்ள வருவார்” என்று தஞ்சையில் உறவினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மற்ற இருவரான சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் அதே சிறையில் தண்டனை பெற்றுவருகிறார்கள். இவர்களும் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் மூவருமே, பரோல் கேட்டு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.