ட்சியையும், தமிழகத்தையும் காத்திட வேண்டும் என்று அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா,  தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும் வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதே ஜெயலலிதா அதிமுகவின் வாயிலாக பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும்.

எத்தனையோ நெருக்கடிகைளைத் தாண்டி இறுதிவரை சிறுபான்மையினரின் நலனை விட்டுக் கொடுக்காத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தினார்.

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று எதிரிகளைப் பார்த்து அறைகூவல் விடுத்தவர் ஜெயலலிதா.

அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.

இந்தியாவின் 3-வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுக சிறிதளவும் கீழே இறங்கி விடக்கூடாது என்ற அக்கறையாலேயே  என்னை கட்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டேன்.

வீழ்ந்தே கிடக்கும் எதிரிகள் எஃகு கோட்டையில் விரிசல் விழாதா, தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பை விட உறுதியாய் கட்சியையும், தமிழகத்தையும் காத்திட வேண்டும் என எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சூளுரை ஏற்போம்” என்று  சசிகலா  அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக 3 ஆக பிரிந்ததற்கு பாஜக தான் காரணம் என நேற்று நமது எம்ஜிஆரில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று சசிகலா கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.