அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற வி.கே.சசிகலா, தன்னை எதிர்ப்பவர்களையும் அரவணைத்துச் செல்வதே நல்லது என்று செயல்பட்டுவருகிறார். தன்னை கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்தை அழைத்துப் பேசி, அவரையும் தனது விசுவாசியாக்கியது ஒரு உதாரணம்.

இந்த நிலையில், முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்து ஒருவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்.

நீக்கப்பட்டவர்..  அதிமுக பிரமுகரும் நடிகருமான  பஷீர் (எ) விஜய் கார்த்திக் என்பவர்தான்.

நீக்கத்துக்கு என்ன காரணம்?

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில்  அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி , மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார் எம்ரே (வயது 26) என்பவர்.  இவர் தனக்கு சொந்தமான  பென்ஸ் காரை விற்க,  ஓஎல்.எக்ஸ்,- ல்  விளம்பரம் செய்தார்.

இதையடுத்து  நடிகரும்  அதிமுக பிரமுகருமான  பஷீர் (எ) விஜய் கார்த்திக் என்ற  என்பவர், அந்த காரை வாங்கிக்கொள்வதாக கூறி எம்ரேவை அணுகியிருக்கிறார்.

குறிப்பிட்ட இடத்திற்கு காரை கொண்டு வரச்சொல்லி பார்த்து ரூ.8 லட்சத்துக்கு விலை பேசி ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார்.  காரை எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு மீதித் தொகையைத் தரவே இல்லை.

இது பற்றி, கார் உரிமையாளர் எம்ரே கேட்டபோது, அவரை  ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அவரை தாக்கி அவரிடமிடருந்து பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலர்களை பறித்து சென்றுவிட்டார். . இதுபற்றி எம்ரே வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் பஷீர் (எ) விஜய் கார்த்திக், தனது அரசியல் செல்வாக்கை காட்ட…  போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.  இது பற்றி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எதுவும் நடக்காததால் வேறு வழியில்லாமல் துருக்கி தூதரகத்தில் புகார் அளிக்கப்பட்டது..

தூதரகத்திலிருந்து கொடுத்த அழுத்தம் காரணமாக போலீசார் வேறு வழியில்லாமல் பஷீர் (எ) விஜய் கார்த்திக்கையும் (44) மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் அவரது நண்பர்களான சவுத்ரி (45), பாபு(30) இரண்டு பேரையும் கைது செய்தனர்.

பஷீர் மற்றும் கூட்டாளிகள்

இதையடுத்துதான் பஷீர் (எ) விஜய் கார்த்திக்கை, கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் சசிகலா.

ஆனந்தராஜ் வீட்டை முற்றுகையிடப்போவதா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது பஷீர் (எ) விஜய் கார்த்திக்தான்.  . விஷால் அலுவலகத்தை தாக்கியதிலும் இவருக்கு தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரித்தீஷின் தீவிர ஆதர்வாளரான இவர், மோசடி நடவடிக்கைகளாலேயே பெரும் பணம் சேர்த்துவிட்டதாக சொல்கிறார்கள்.  சென்னை  வளசர வாக்கத்தில் மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்டி வசிக்கிறார் இந்த பஷிர். இங்குதான் பல கட்டப்பஞ்சாயத்துகள் நடக்குமாம்.

சினிமாவில் சிறு வேடங்களில் நடித்துவந்தார். பிறகு,  அராத்து என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

எப்படியோ, சசிகலாவால் நடவடிக்கைக்கு ஆளான முதல் நபர் என்ற “பெருமையை” அடைந்துவிட்டார் பஷீர் (எ) விஜய் கார்த்திக்.