தனுஷுக்கு தொடர்ச்சியாக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை டைரக்டு செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார். அடுத்து, தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன், ‘பைவ்ஸ்டார்’ கதிரேசனுடன் இணைந்து தயாரிக்கிறார்.

மதுரை மற்றும் சென்னையை கதைக்களமாக கொண்ட இந்த படம். வெற்றிமாறனின் பார்முலாவான “ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட்” படமாக இருக்கும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஜனவரி மாதம் ஆரம்பமாகிறது. இந்த படத்தின் இயக்குநர் மற்றும் பிற நடிகர்- நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே சசிகுமார் நடித்து ஐந்து திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி