சென்னை:

சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் நடித்து பெயர்பெற்ற குணச்சித்திர நடிகர்  கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 54.

ஈரோடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்  உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணத்தை தழுவினார்.

சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் 2009-ம் ஆண்டு வெளியான  வெளிவந்த படம்  நாடோடிகள்.. இந்தப் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் – அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர்  கோபாலகிருஷ்ணன்.

கோபாலகிருஷ்ணனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.