சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

சமுத்திரகனி தான் இயக்கிய நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணா இதிலும் நடித்துள்ளார்கள்

இவர்கள் தவிர அஞ்சலி, அதுல்யா, திருநங்கை நமீதா ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

7 பேர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் பெயரில் அஞ்சலி, சமூக போராளியாக நடித்திருக்கிறார். சசிகுமார் ஜீவா என்கிற போராளியாக நடித்திருக்கிறார். திருநங்கை நமீதா வழியாக அந்த மக்களின் வேதனைகள் சொல்லப்படுகிறது.

பைனான்ஸ் சிக்கலால் படத்தின் வெளியீடு தடைப்பட்டுக் கொண்டே வந்தது. இந்தநிலையில், தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டு, ஜனவரி 31-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.