Random image

மருத்துவர் சைமன் மறைவு தொடர்பாக, மக்கள் சார்பில் மருத்துவர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ள சசிகுமார்….!

சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சசிகுமார் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் .