சசி லலிதா என்ற தலைப்பில் சசிகலா பற்றி தயாராகும் படம் …!

அம்மா என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்மைச்சர் ஜெயலலிதா பற்றி ஒரு படம் தயாரானது , ஆனால் கர்நாடக மாநில அதிமுகவினர் வழக்கு தொடர்ந்ததால் அப்படம் வெளியிடப்படவில்லை.

ஆனால் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதா பற்றிய படம் இயக்கவுள்ளார் . அதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கிறார் . அதே சமயம் இயக்குனர் கவுதம் மேனன் புரட்சித் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை டெலி சீரிசாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடித்து வருகிறார்கள். மேலும் ஐயர்ன்லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனரும் ஜெயலலிதா பற்றிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக சமீபத்தில் ராம்கோபால் வர்மா அறிவித்து அதன் சர்ச்சைக்குரிய பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

தற்போது சசிகலா பற்றி இன்னொரு படம் தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. சசி லலிதா என்ற தலைப்பில் தயாராகும் இப்படம் ஜெயம் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. .கே.ஜகதீஸ்வர ரெட்டி என்பவர் இயக்குகிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் சசிகலா, ஜெயலலிதா முகங்கள் இணைந்த ஒரு முகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

2 thoughts on “சசி லலிதா என்ற தலைப்பில் சசிகலா பற்றி தயாராகும் படம் …!

 1. What i don’t realize is if truth be told how you are now not
  actually much more smartly-liked than you might be right now.

  You are very intelligent. You already know thus considerably in relation to this topic, produced me individually consider it
  from numerous varied angles. Its like men and women aren’t interested except it’s
  something to accomplish with Lady gaga! Your personal stuffs excellent.
  Always deal with it up! https://termtorg.ru/bitrix/rk.php?goto=https://bukovets.com/sinevir/

Leave a Reply

Your email address will not be published.