மன்னார்குடி,

துவரை தனித்தனியாக கோலோச்சி வந்த சசிகலா உறவினர்களான தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ போன்றோர், தற்போது துக்க வீட்டில் கூடி குலவி வருகின்றனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி சந்தோஷத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக எடப்பாடியின் முதல்வர் நாற்காலி எந்த நேரத்திலும் உருவப்படலாம் என கூறப்படுகிறது.

சசிகலாவின் அண்ணி சந்தானாலட்சுமி உடல்நலமில்லாமல் நேற்று மரணடைந்தார். அவரு இறுதி சடங்கு மன்னார்குடியில் நடைபெறுகிறது.

இந்த துக்க நிகழ்ச்சிக்கு, இதுவரை எலியும் பூனையுமாக இருந்த தினகரன், திவாகரன் மிகவும் மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

இவர்களின்  இந்த இணைப்பானது எடப்பாடியின் நாற்காலிக்கு ஆபத்து என்ற அறிகுறியை உறுதி படுத்தி உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் கூறுகிறது.

சசிகலா மற்றும் திவாகரனின் அண்ணி சந்தானலட்சுமி நேற்று காலமானார். சந்தானலட்சுமியின் மகள் அனுராதாவைத்தான் தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமியின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ்.

அதிமுகவை யார் கைப்பற்றும் போட்டியில் சசிகலாவின் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக சில காலம் பிரிந்துகிடந்த சசிகலாவின் உறவினர்கள், தற்போது சந்தான லட்சுமியின் மரணத்தில் இணைந்துள்ளனர்.

மறைந்த சந்தானலட்சுமியின் இறுதி சடங்குக்கு வந்த இவர்கள்  டாக்டர் வெங்கடேஷூக்கு ஆறுதல் தெரிவிக்கும் போது மூவரும் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தனர். பின்னர் மூவரும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இந்த மும்முர்த்திகளின் விளையாட்டு ஆரம்பமானால், அதிமுக கலகலக்கும் என கூறப்படுகிறது.

துக்க வீட்டில் அவர்கள் சந்தோஷமாக கூடிகுலவி வந்தது, எடப்பாடி அணியினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

ஏற்கனவே டிடிவி தினகரன் விதித்துள்ள கெடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5ந்தேதியுடன் நிறை வடைய இருக்கும் நிலையில்,

தற்போது சசிகலா உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும், கட்சியும் ஆட்சியும் சசிகலா அன் கோவினரால் கைப்பற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக தொண்டர்கள் அனைவரும், கட்சிக்குள் சசிகலா குடும்பத்தினர் வருவதை விரும்பாத நிலையில், சசிகலா தரப்பினர் மீண்டும் கட்சியை கைப்பற்ற முடிவு எடுத்திருப்பதால்,   அதிமுகவில் மீண்டும் பிரளயம் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக  ஆட்சிக்கும், கட்சிக்கும் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்ற பழமொழிக்கு ஏற்ப, சந்தானலட்சுமியின் மரணம் சசிகலா உறவினர்களிடயே மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்தி, அதிமுகவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.