9ம் தேதி முதல்வராகிறார் சசிகலா

--

அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக விகே சசிகலாவை முன்மொழிந்து முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார். இதையடுத்து அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே சிசகலா முதல்வராவது உறுதியாகிவிட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தியாகச்செம்மல் சின்னம்மா செய்துமுடிப்பார்” என்று  தெரிவித்தார்.

இவர் வரும் 9ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஏற்கெனவே இந்த  தகவலை பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.