மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சதாரா மக்களவை தொகுதியில் சரத்பவார் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. அத்துடன் காலியாக உள்ள சதாரா மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சியுடன்  சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து, போட்டியிடுகிறது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அங்கு காலியாக சதாரா மக்களவை தொகுதியில் சரத்பவார் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஏழு முறை மக்களவை உறுப்பினர் பதவி வகித்துள்ள 78 வயதான சரத் பவார், கடைசியாக 2009 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். பரமதி பரோன் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் போட்யிடவில்லை.

சதாரா தொகுதி எம்.பியான தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரான உதயன்ராஜே போஸலே, சமீபத்தில் கட்சியை விட்டு விலகியதோடு சதாரா தொகுதி எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.