ரோபோ 2.0 ஒளிபரப்பு உரிமை ரூ.110 கோடி…ஜீ டிவி சாதனை

மும்பை:

ரோபோ 2.0 ஒளிபரப்பு உரிமையை ரூ. 110 கோடிக்கு ஜி டிவி பெற்றுள்ளது.

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஜய்குமார் நடித்து வரும் ரோபோ 2.0 படப்பிடிப்பு 90 சதவீம் நிறைவடைந்துவிட்டது. சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலும், சில சீரமைப்பு பணிகள் மட்டுமே மீதம் உள்ளது.

இந்த படம் இன்சூரன்ஸ் செய்தது உள்பட பல்வேறு சாதனைகளை படைக்கும் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் இந்த படத்திற்கான அனைத்து மொழி செயற்கை கோள் உரிமையை ஜி டிவி பெற்றுள்ளது.

ரூ.110 கோடிக்கு ரோபோ 2.0 ஒளிபரப்பு உரிமை பெற்று ஜி டிவி சாதனை படைத்துள்ளது. இது தான் தற்போதைய பரபரப்பு செய்தியாக திரையுலகத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி.ஜாக்சன் நடித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: satellite rights of 2.0 has been sold to Zee at a whopping price, ரோபோ 2.0 ஒளிபரப்பு உரிமை ரூ.110 கோடி...ஜீ டிவி சாதனை
-=-