எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்…ஹர்பஜன்சிங் வேதனை

டெல்லி:

துக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்…  என்று சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட தந்தை மகன் மரணம் குறித்து பிரபல கிரிக்கெட்வீரர்  ஹர்பஜன்சிங் வேதனை தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பையும், டிவிட்டரில் டிரெண்டிங்காகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது சாத்தான்குளத்தில் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. ஊரடங்கு விதிகளை மீறியதாக, கூறி காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை மகன் ஆகியோர் காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும்  தென்மாவட்டங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும்,  விளையாட்டு துறையினரும் தமிழக காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித் தனமான செயல்களை கண்டித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கடுமையாக கண்டித்திருந்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரும், சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

You may have missed