சாத்தான்குளம் சம்பவம்: மேலும் 6 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை…

சாத்தான்குளம் :
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றிய  மேலும் 6 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை-மகன்  வழக்கை உயர்நீதி மன்றம் மதுரை கிளையின் நேரடி மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
 சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்
இந்த நிலையில், சாத்தான்குளம்   காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 6 காவலர்களிடம் விசாரணை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண் காவலர் பியூலா, காவலர் தாமஸ் உள்ளிட்ட6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக வும்,  மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் அப் போலீசையும் விசாரிக்க 4 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை # சாத்தான்குளத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.