மதுரை:

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் கொலையில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்த்தில், ஊரடங்கு நேரத்தை கடத்து கடையை திறந்து வைத்திருந்தாக கூறி, தந்தை மகனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அடுத்த நாள் அவர்கள் இருவரும் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.  விசாரணை யின்போது அவர்கள் இருவரையும் காவலர்கள் சரமாரியாக தாக்கியதாலேயே அவர்கள் மரணம் அடைந்ததாக கூறப்ப்பட்டது. இந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால்பல இடங்களில் சாலை மறியல், போராட்டம் என தீவிரமானது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்  தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது. இன்று   வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக காவல்துறை டிஜிபியும் தூத்துக்குடி காவல்துறை கண்காணப்பாளரும், மதியம் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

மீண்டும் மதியம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரணை கைதிகள் மரணம் அடையும் சம்பவங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று கடுமையாக எச்சரித்த நீதிபதிகள், விசாரணை கைதிகள் விவகாரத்தில்,  தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஜூன் 26ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதோடு, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து  கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உரிய நீதி வழக்கப்படும் என  உறுதி அளித்தனர்.