சாத்தான்குளம் சம்பவம்: இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று,  போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று இந்த மனுமீதான விசாரணை  காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.  அப்போது, அவர்களை  ஜாமீனில் விடுவிக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கார்ட்டூன் கேலரி