சாத்தான்குளம் சம்பவம்: காவலர் ரேவதியைத் தொடர்ந்து, அப்ரூவராக மாறும் சிறப்பு காவல் உதவிஆய்வாளர் மற்றும் காவலர்….

சாத்தான்குளம்:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சாத்தான் குளம்  காவல்நிலைய பெண் காவலர் ரேவதியைத் தொடர்ந்து,  சிறப்பு காவல் உதவிஆய்வாளர் மற்றும் காவலர் அப்ரூவராக மாறுவதாக கூறப்படுகிறது.

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில், மதுரை உயர்நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட  ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 5 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், காவல்துறையினரின் அத்துமீறிலுக்கு,  முக்கிய சாட்சியாக அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ரேவதி சிபிசிஐடியிடம் சாட்சி கூறினார். அதைத் தொடர்ந்து,  சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர்  சிபிசிஐடி சாட்சியாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.