தமிழகத்தில் இன்று 4 மணிநேரம் மருந்துக்கடைகள் மூடல்

--

சென்னை:
மிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருக்கும் வணிகர் சங்க பேரவைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகள் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மட்டும் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

You may have missed