சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ்வழக்கு: 3 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..

மதுரை: சாத்தான்குளம் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட, வியாபாரிகளான  பென்னிக்ஸ் ஜெயராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு காவலர்களின் ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். சமீபத்தில், சிறப்பு உதவி ஆய்வாளா் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தாா்.  இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 போ மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது .

இந்த கொலை வழக்கில்,  கைதான தலைமைக் காவலா் முருகன், காவலா்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.  இந்த வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் கோரிய மனுக்களை  நீதிபதி பாரதிதாசன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.