சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உபயோகப்படுத்திய காரை உரிமையாளரிடம் ஒப்படைக்க அனுமதி…

சென்னை:
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உபயோகப்படுத்திய காரை உரிமையாளரிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   காரின் உரிமையாளர் காரை எடுத்துச்செல்ல சிபிசிஐடி அனுமதி வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளயிக கூறப்பட்டட்  சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு காரில் செல்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் அந்த காரை மடக்கி அவரை கைது செய்தனர். தற்போது அந்த கார் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. டிஎன் 10 ஏஎச் 2304 என்ற ஷிப்ட் கார், சென்னை முகப்பேரை சேர்ந்த சுரேஷ்குமா் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.
சுரேஷ்குமார் அந்த காரை திருநெல்வேலியை சேர்ந்த கந்துவட்டி நபரிடம்  ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். ஆனால் இதுவரை மீட்கவில்லை என்றும், அந்த காரை வாங்கி கந்துவட்டிக்காரர் சிறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த கார் மூலம் இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல முயன்ற விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த  கார்  கங்கைகொண்டான் போலீிஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சுற்றி வந்த காரை உரிமையாளரிடம் ஒப்படைக்க சிபிசிஐடி அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த காரில், எந்த குற்றச்செயலும் காரில் நடக்காததால் காரை எடுத்துச்செல்ல  அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.