நெல்லை:

சாத்தான்குளம் காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு  நேரத்தை மீறி கடை திறந்ததற்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்பபட்டு கடுமையாக தாக்கப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்  உயிரிழந்ததனர். அவர்கள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களில் முதலில் தந்தை ஜெயராஜூம்  மகன் பென்னிக்சும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான  இந்த  சம்பவத்தில், காவலர்கள்மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். காவலர்களின் இந்த வன்செயலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடைஅடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் நேற்று அவர்கள் உடல் பிரேதபரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி, சான்தான்குளம் வருகை தந்து இறந்தவர்களின் உடல்களுக்கு மரியாதை செய்ததுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, இன்று திமுக சார்பில், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.