சாத்தூரை தொடர்ந்து சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மீது எய்ட்ஸ் ரத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் புகார்

சென்னை:

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனக்கு எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான ரத்தம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தற்போது தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் பரபரப்பையும், அரசு மருத்துவமனை மற்றும் தமிழக அரசின்  அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பிணி யாக இருந்தபோது, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி உள்ளதாக பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாங்காட்டை சேர்ந்த அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது ரத்த சோகைக்கு ரத்தம் ஏற்றிக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாகவும்,  கடந்த ஏப்ரல் 5ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார். தனக்கு கடநத்   கடந்த செப்டம்பர் மாதம் பிரசவம் நடைபெற்றுள்ளது.

தனக்கு எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது, பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், ரத்த பரிசோதனை செய்யப்பட்டபோது தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முறையிட்டதாகவும், ஆனால் மருத்துவ மனை நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்த சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை  செயலாளரிடம் புகார் கூறியதாகவும், ஆனால், இதுவரை எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.

ரத்த வங்கி ஊழியர்கள் மெத்தனத்தால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது என்றும், தமிழக அரசுதான் தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும், தனக்கு ரத்தம் ஏற்றிய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும், தனது நெருங்கிய உறவினர்களை தன்னை வெறுத்து ஒதுக்கி வைத்துள்ளதாகவும் வேதனைப்பட்டார்.

மாங்காடு பெண்ணின் இந்த அதிரடி குற்றச்சாட்டு தமிழக சுகாதாரத்துறையை ஆட்டம் காண வைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி