சென்னை,

பாரம்பரியம் மிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதியாக, ஒரிசா மாநில ஐகோர்ட்டு நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

அவருக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில்  53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் நிலையில், ஒடிசாவை சேர்ந்த சத்ருகன் புஜாஹரி சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த 15ந்தேதி பிறப்பித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை ஐகோர்ட்டில்பதவி ஏற்றுக்கொண்டார்.

இவரது நியமனத்தை தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 54 நீதிபதிகளே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகன புஜாரிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவரது நியமனத்தை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகளின் காலியிடம் 21 ஆக குறைந்துள்ளது.

சத்ருகன புஜாரி ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது