ரஃபேல் புத்தகங்கள் பறிமுதல் : திரும்ப ஒப்படைக்க தேர்தல் அதிகாரி  உத்தரவு

சென்னை

றிமுதல் செய்யப்பட்ட ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களை திரும்ப ஒப்படைக்க தேர்தல் அதிகாரி சாகு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய ரஃபேல் பேரம் குறித்து ஒரு புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட இருந்தது. அந்த புத்தகத்துக்கு” நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்றே பெயரிடப்பட்டிருந்தது. அந்த புத்தகத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தாக கூறி காவல்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

காவல்துறை அதிகாரிகளின் இந்த பறிமுதல் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்தன. இந்து ராம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் இந்த நடவடிக்கை அராஜகமானது என கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து மக்களில் பலரும் மோடியின் உத்தரவுக்கு இணங்க மாநில அரசு செயல்பட்டு வருவதாக கூறினர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு, “இந்த புத்தகங்கள் வட்டார தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் உத்தரவால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை உடனடியாக திருப்பி ஒப்படைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Police seized, Rafale scam books, sathyaprada sahu
-=-