உளவுத்துறை ஐஜியாக மீண்டும் பொறுப்பேற்கிறார் சத்தியமூர்த்தி!

சென்னை,

மிழக உளவுத்துறை ஐஜியாக மூன்றாவது முறை பொறுப்பேற்க இருக்கிறார் சத்தியமூர்த்தி

தமிழக உளவுத்துறை ஐஜியாக பதவிவகித்து வந்த கே.என்.சத்தியமூர்த்தி கடந்த பிப்ரவரி மாதம் 6ந்தேதி முதல் தொடர் விடுப்பில் சென்றார்.

அதன் காரணமாக அந்த பதவிக்கு காவலர் நலப்பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

அவர் 11 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். அதற்கு அவர் மாற்றப்பட்டு,  பாதுகாப்பு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் தமிழக உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக மூன்றாவ துமுறையாக மீண்டும்த சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டு முதல் முறையாக சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். பின்னர்  2016 சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால்  அவர் மாற்றப்பட்டார். பின்னர்  மே 23ம் தேதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து பிப்ரவரி 2017 அன்று  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed