சத்யராஜ் நடிப்பில் உருவாகும் சூது கவ்வும் – 2…..!

2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் சி.வி.குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது . இந்த படத்தை சி.வி.குமார் தயாரிக்க , யங் மங் சங் படத்தை இயக்கியுள்ள அர்ஜுன் இயக்குகிறார்.

மேலும் இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம்.