ஜோதிகாவுக்கு அப்பாவாகிறார் சத்யராஜ்…!

‘பாபநாசம்’ பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா – தம்பியாக நடிக்கிறார்கள். ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகா தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில், கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.