சென்னை

சாதி வெறி காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மாணவரின் தற்கொலைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் கவின் கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர் பிரகாஷ்.   அந்த கல்லூரியின் சிறந்த மாணவர் என்று இரண்டு முறை விருது வாங்கியவர்.

கடந்த (அக்டோபர்) மாதம் 25ம் தேதி பிரகாஷ்  தற்கொலை செய்துகொண்டார்.

 

மாணவர் தற்கொலையைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்   அப்போது அவர்கள், “பிரகாஷ் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜோயல் பிரகாஷ் என்று பெயர் வைத்தக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த பேராசிரியர் துறைத் தலைவரான  பேராசிரியர் ரவிக்குமார் என்பவர், ‘உன்னை நல்ல பையன் என்று நினைத்தேன், நீயோ சர்ச் போகிறாயாமே? உன் முக நூலில் ஜோயல் பிரகாஷ் என்று பெயர் வைத்து இருக்கிறாயாமே” என்றும், ”ஜோயல் என்கிற பெயரை நீக்கு” என்றும் ஜோயல் பிரகாசிடம் கூறியுள்ளார்.


”அது என் விருப்பம் சார்” என்று பிரகாஷ் பதில் கூறி இருக்கிறார்.

அன்று முதலே ரவிக்குமாருக்கு ஜோயல் மீது வன்மம் ஆரம்பித்ததுள்ளது.
ஆதாமின் சிலையை வடிவமைத்து கொண்டு இருந்த பிரகாஷிடம்,
”உன்னை யார் ஆதாம் சிலை செய்ய சொன்னது, சிவன் சிலை செய்” என்று கூறியிருக்கிறார் ரவிக்குமார்.
”என் படைப்பில் நீங்கள் தலையிடாதீர்கள் சார்” என்று ஜோயல் கூறி இருக்கிறார்.

ரவிக்குமார் விடுவதாக இல்லை.
அடுத்த நாள், ”இப்போதுதான் உன்னை விசாரித்தேன் நீ எஸ்.சி.யாமே” என்று கேட்டிருக்கிறார். ஜோயலும், ஆமாம் என்று கூற, ”எஸ்.சி.என்றால் என்ன என்று கேட்க, ஜோயல், ‘பறையர் சாதி’ என்று கூறியுள்ளார்.
உடனே ரவிக்குமார், ”ஒரு வேலை சோத்துக்காக மதம் மாறுவான் பறையன்” என்று கூறியிருக்கிறார்.

கல்லூரியில் பயின்ற சக தலித் மாணவர்கள் பேராசிரியர்.ரவிக்குமாருக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர்.
கல்லூரி முதல்வர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது.
முதல்வர், பேரா.ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி மாணவர்களை அமைதி படுத்தி இருக்கிறார்.

அனால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த போக்கு சாதிவெறியரான  ரவிக்குமாருக்கு மேலும் தெம்பூட்டவே, ஜோயல் பிரகாசுக்கு அடுத்தடுத்து மனரீதியான நெருக்கடிகளை தர துவங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், 25.10.2017 அன்று மலை பகுதியின் மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

தனக்கு நடந்த சாதிய வன்கொடுமைகளை வீடியோவில் பேசி, கடிதங்கள் எழுதி வைத்து சாட்சியங்களை கொடுத்துவிட்டு தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார்” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவர் பிரகாஷின் மரணத்தைக் கண்டித்து சத்யராஜ் பேசி, அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். தற்போது சமூகவலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

சத்யராஜ் பேசிய வீடியோ..

[youtube https://www.youtube.com/watch?v=-b-kmHNnGHc]